/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., பழனிசாமி இன்று திண்டுக்கல் வருகை
/
அ.தி.மு.க., பழனிசாமி இன்று திண்டுக்கல் வருகை
ADDED : செப் 05, 2025 02:38 AM
திண்டுக்கல்: செப்.6,7 என - இரு நாள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி இன்று இரவு திண்டுக்கல் வருகிறார்.
'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற வாசகத்துடன் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி சட்டசபை தொகுதி வாரியாக மக்களை சந்தித்தப்படி தொடர் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். 4 ம் கட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் செப்.6, 7ல் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று (செப்.5) இரவு திண்டுக்கல் வரும் அவருக்கு திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நாளை (செப். 6) காலை தாடிகொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மஹாலில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4:00 மணிக்கு நத்தம், 6:00 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு, இரவு 8:00 மணிக்கு நிலக்கோட்டையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை மறுதினம் (செப்.7) மாலை 4:00 மணிக்கு ஆத்துார் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி, மாலை 6:00 மணிக்கு ஒட்டன்சத்திரம், இரவு 8:00 மணிக்கு பழநியிலும் பிரசாரம் செய்கிறார். வரவேற்பு, சுற்றுப்பயண ஏற்பாடுகளை திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட அ.தி.மு.க., வினர் செய்து வருகின்றனர்.