/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க: இருளில் பாதயாத்திரை பக்தர்கள்: அடிப்படை வசதி பணிகளில் மந்தம்

ADDED : ஜன 10, 2025 07:35 AM

தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதையாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 டிச. இறுதி வாரம் முதலே பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்டம் நிர்வாகம்,போலீஸ் தரப்பிலோ ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. வாகன ஓட்டிகளுக்கு பக்தர்கள் செல்வதை அறிந்து ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது.
2024ல் பாதையாத்திரை பக்தர்கள் செல்லும் நடைமேடை முழுவதும் திண்டுக்கல் முதல் பழநி வரை டியூப் லைட்டுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து கட்டப்பட்டிருந்தன. அதேபோல் ஆங்காங்கே ஒளிரும் குச்சிகள், பட்டைகள், அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தாண்டில் ஜன. 10 தேதியை நெருங்கியும் அதற்கான பணிகள் ஏதும் நடக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக பெயரளவில் நடக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.