ADDED : டிச 07, 2024 06:53 AM
குஜிலியம்பாறை: கூம்பூரில் ஆதிதிராவிடர் பட்டியல் இன கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க., மேற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவின் துணை அமைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.
குஜிலியம்பாறை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. காங்., மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல் பங்கேற்றனர் .வேடசந்துாரில் தமிழர் சமூக நீதிக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிறுவனத்தலைவர் தங்கபாண்டியன்,பொதுச்செயலாளர் சரவணவேல்,மாவட்ட நிர்வாகிகள் முருகன்,ஜோசப் ஆரோக்கியதாஸ்,மலையாளராஜா,சக்திவேல்,நந்தகோபால், ஒன்றிய நிர்வாகிகள் கோபி,ராஜசேகர்,விஜயராஜ் பங்கேற்றனர்.