/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைக்கு சூடு அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்
/
குழந்தைக்கு சூடு அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்
UPDATED : ஏப் 17, 2025 02:17 AM
ADDED : ஏப் 17, 2025 01:31 AM
கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் சுரக்காபட்டியில் 3 வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தர்மத்துப்பட்டி
அருகே சுரக்காபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜபாண்டி.
இவரது 3 வயது மகள் தர்ஷிகா ஸ்ரீ அங்குள்ள அங்கன்வாடியில் படித்து
வருகிறார். இங்கு 13 க்கு மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு
வருகின்றனர். தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி அமைப்பாளராகவும்,
சுரக்காபட்டியை சேர்ந்த செல்லம்மாள் சமையல் உதவியாளராகவும் வேலை பார்த்து
வருகின்றனர்.
நேற்று முன்தினம் அங்கன்வாடியில் இருந்து திரும்பிய
தர்ஷிகா ஸ்ரீ கழுத்தில் காயங்களுடன் அழுது கொண்டிருந்தார். பெற்றோர்
விசாரித்ததில், குழந்தை சேட்டை செய்ததால் செல்லம்மாள் சூடு வைத்தது
தெரியவந்தது. இதை பெற்றோர் செல்லம்மாளிடம் விசாரித்த போது வாக்குவாதம்
ஏற்பட்டது. தர்ஷிகா ஸ்ரீக்கு அங்குள்ள மருத்துவமனையில்
சிசிச்சையளிக்கப்பட்டது.
இதனிடையே கலெக்டர் சரவணன் அறிவுறுத்தலின்
பேரில் பாப்பாத்தி, செல்லம்மாள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி
உத்தரவிட்டுள்ளார்.