/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் திரியும் விலங்குகள்; 6வது வார்டு மக்கள் அவதி
/
ரோட்டில் திரியும் விலங்குகள்; 6வது வார்டு மக்கள் அவதி
ரோட்டில் திரியும் விலங்குகள்; 6வது வார்டு மக்கள் அவதி
ரோட்டில் திரியும் விலங்குகள்; 6வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஏப் 24, 2025 06:21 AM

பழநி: ரோட்டில் திரியும் விலங்குகள் தொல்லையால் பழநி நகராட்சி 6வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்திரா நகர்,புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு உள்ளடக்கிய இந்த வார்டில் நெருக்கமான குடியிருப்புகள் அதிகம் உள்ளன.
6வது வார்டை இணைக்கும் இட்டேரிரோடு, புது தாராபுரம் ரோடு பகுதிகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.
இந்திரா நகர் பகுதியில் இருந்து புதுதாராபுரம் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு பகுதிகளை அடையும் போது விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
புகையால் மூச்சு திணறல்
ரவீந்திரன், தொழில் முனைவோர், இந்திராநகர் : பெரியப்பா நகர் குப்பை கிடங்கிலிருந்து வரும் புகையால் தினமும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கிறோம். முதியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. இதனை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் ரோடு, இட்டேறி ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிரமத்தில் மக்கள்
தட்சிணாமூர்த்தி, மளிகை கடை உரிமையாளர் , இந்திரா நகர் : பாதாள சாக்கடை திட்டம் விரைவில் அமைக்கப்பட வேண்டும். இந்திரா நகர் சாலைகளில் தெருக்களில் மாடு, குதிரை, நாய் என அனைத்து விலங்குகளும் திரிகின்றன .
இதனால் தெருவில் டூவீலரில் செல்லும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது .குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்திரா நகர் வீதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
வீரமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் குப்பை முறையாக அகற்றப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கிடங்கில் இருந்து வரும் புகையை கட்டுப்படுத்த விரைவில் தீர்வு காணப்படும். ரூ .30 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகம் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.