ADDED : அக் 31, 2024 02:48 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான விருது வழங்கப்பட்ட உள்ளது.
சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழு ஒப்புதலுடன் மாவட்டத்துக்கு தலா ஒரு விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
மாநில அளவிலான குழு உறுப்பினர்கள் பரிசீலனை செய்து பரிசு வழங்க தேர்ந்தெடுப்பர்.
தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதல் பரிசு ரூ.1,00,000, 2ம் பரிசு ரூ.60,000,3ம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும்.

