
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: திருநுாத்துபட்டியை சேர்ந்த தையல் தொழிலாளி பழனிச்சாமி மகன் நிதிஷ்குமார். செந்துறை அரசு பள்ளியில் படித்த இவர் நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீட்டில் 430 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.
இதற்காக செந்துறை பள்ளியில் மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் தேவமனோகரி தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர்கள் ராஜாக்கிளி, வாசுகி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன் பரிசு வழங்கினார்.
நாகசிவா சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் நாகராஜ்பிள்ளை,முன்னாள் ஊராட்சி தலைவர் சவரிமுத்து உள்ளிட்டோரும் பரிசு வழங்கினர்.