/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்; கூட்டம் ஒத்திவைப்பு
/
பழநி நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்; கூட்டம் ஒத்திவைப்பு
பழநி நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்; கூட்டம் ஒத்திவைப்பு
பழநி நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்; கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 14, 2025 12:15 AM
பழநி: பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பழநி நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி(தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்), பொறியாளர் ராஜவேலு, நகர் நல அலுவலர் மனோஜ் குமார், நகர அமைப்பு அலுவலர் புவனேஸ்வரன், மேலாளர் நாகேந்திரன் முன்னிலை வைத்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
தீனதயாளன் (தி.மு.க.,): தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா.நகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் கோடைகால நீர்த்தகத்தில் தண்ணீர் உள்ளதா. தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா. சாலையோர வியாபாரிகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.
தலைவர்: சாலையோர வியாபாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பொறியாளர்: குடிநீருக்கு தேவையான அளவு தண்ணீர் கோடைகால நீர்த்தேக்கத்தில் உள்ளது உஜ்வாலா திட்டம் நிறைவேற்றிய பின் தொடர்ந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர் நல அலுவலர்: 450 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
மீனாட்சி தேவி (தி.மு.க.,): தற்போது குடிநீர் சுகாதாரமான முறையில் துாய்மையாக வருகிறது. நடவடிக்கை எடுத்த நகராட்சி அலுவலர்கள்,நிர்வாகத்திற்கு நன்றி. உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு உள்ளது .
தலைவர் : ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
செபஸ்டின் (தி.மு.க.,): 40 அடி அகலம் சாலைகளுக்கு 25 வாட்ஸ் விளக்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. தெரு விளக்கு பராமரிக்கும் நபர்களுக்கு உதிரி பாகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா. பாதாள சாக்கடை திட்டத்தின் போது குறுகிய சாலைகளில் நடுவில் குழி தோண்ட வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது குடிநீர் குழாய்கள் பாதிக்கப்படும். குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டால் பொறுப்பு யாருடையது.
தலைவர்: தெரு விளக்கு பராமரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர் வைத்துள்ள இருப்பு குறித்து அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் .பாதாள சாக்கடை திட்டத்தின் போது குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டால் அதற்கு ஒப்பந்ததாகவே பொறுப்பு. இதனை கண்காணிக்க வேண்டும்.மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை கண்காணிக்க அனைத்து கட்சி நிர்வாக குழு அமைக்கப்படும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): ஆட்டடி சாலை செயல்படுகிறதா. திருவள்ளுவர் சாலையில் நடுரோட்டில் ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
நகரமைப்பு அலுவலர்: ஆட்டடி சாலை பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன .விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவர்: சாலையில் வெட்டும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகருக்கு வெளியே ஆட்டடி சாலை அமைக்க திட்டமிடப்படும்.
பத்மினி முருகானந்தம் (காங்.,): பழநி நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் நிரந்தரமாக கமிஷனர் இல்லை .குடிநீர் வழங்கும் வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
தலைவர்: குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பழநி நகரில் இல்லை வெளிப்பகுதியில் இருந்து குடிநீருக்கு சப்ளை செய்யும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்
காளீஸ்வரி (தி.மு.க.,): எங்கள் பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும் அனுமதி இல்லாமல் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன
தலைவர்: எம்.எல்.ஏ., நிதியின் மூலம் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா நடத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்யாது.
(அப்போது தி.மு.க., கவுன்சிலருக்கும் தலைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)
சாகுல் ஹமீது (தி.மு.க.,): மரங்கள் வெட்ட ரூ.48,000 செலவு செய்யப்பட்டது .வெட்டப்பட்ட மரங்கள் எங்கு உள்ளன. பயன்படுத்தாத வாகனங்களின் நிலை என்ன.
இதிலும் வாக்கவாதம் ஏற்பட தலைவரோ, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்படுவாக கூறி கூட்டம் முடிவுற்றது.