ADDED : நவ 30, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ்26. இவரது நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க விக்னேஷ் சென்றார்.
அப்போது நண்பரின் 6 வயது பெண் குழந்தை விக்னேஷிடம் பழகியது. சிறிது நேரத்தில் சிறுமி தன் பெற்றோரிடம் விக்னேஷ் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை, திண்டுக்கல் மகளிர் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

