/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் சாம்பல் புதன்
/
திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் சாம்பல் புதன்
ADDED : பிப் 15, 2024 06:05 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் கிறிஸ்தவர்களின் தவக்கால துவக்கமான சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக பின்பற்றுகின்றனர். இந்த தவக்காலத்தின் துவக்க தினத்தை சாம்பல் புதன் என கடைபிடிக்கின்றனர்.இதையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டில் உள்ள புனித வளனார் சர்சில் மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியார் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. மறைவட்ட அதிபர் மரிய இஞ்ஞாசி சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுத்தார். மேட்டுப்பட்டி வியாகுல அன்னை, குமரன் திருநகர் ஆரோக்கியமாதா, என்.ஜி.ஓ.காலனி ஆரோக்கிய அன்னை, சிறுமலை அடிவாரம் மலைமாதா, மாரம்பாடி அந்தோணியார், மங்கமனுாத்து சந்தியாகப்பர் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருப்பலிக்கு முன் கடந்த தவக்கால ஆண்டின் துவக்க நாளில் தென்னங்குருத்துகளால் செய்த சிலுவையை பாதுகாத்து எடுத்து வந்து சர்ச் களில் எரித்து சாம்பலாக்கினர். அதன்பின் அந்த சாம்பலை பாதிரியார்கள் சிறப்பு திருப்பலியில் மந்திரித்தனர். ஆராதனையில் பங்கேற்றவர்களின்
நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசி சாம்பல் புதன் சிறப்பு வழிபாட்டை நிறைவு செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

