நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் முகாம் அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். அவரை மாவட்ட எஸ்.பி., பிரதீப் வரவேற்றார். திண்டுக்கல் நகர், ஊரக டி.எஸ்.பி., அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்ட அவர், சப் டிவிசன் போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.