/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்க நீர்மட்டம்
/
வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்க நீர்மட்டம்
வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்க நீர்மட்டம்
வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்க நீர்மட்டம்
ADDED : பிப் 16, 2025 03:06 AM
ஆத்துார் : ஆத்துார் பாசனக் குளங்களுக்கான நீர்வரத்து தொடரும் நிலையில் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரத்து குறைந்துள்ளது.
ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 5 முறை நிரம்பி மறுகால் சென்றது. இதன் சொற்ப நீர் விவசாய பாசன குளங்களுக்கு செல்கிறது.
பாசன வெளியேற்றத்தில் ஒரு பகுதி கருங்குளம், நடுக்குளம் வழியே செல்கிறது.
அதே வேளையில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க வாய்க்காலில் வரத்துநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கூழையாறு, சிற்றாறுகளின் நீர்வரத்தும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
இதையடுத்து 3 வாரங்களுக்கு முன் மறுகால் வெளியேற்றம் நின்றது. அடுத்தடுத்து நீர்மட்டமும் குறைய துவங்கியது.இங்கு நேற்றைய நிலவரப்படி (24) 22.4அடியாக உள்ளது.