ADDED : ஜூலை 09, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : சுள்ளெரும்பு பழைய கோட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்ராஜ் 70. அரசு வழங்கிய பட்டா இடத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டி வருகிறார்.
அந்த வீட்டை கட்ட விடாமல் அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டி, அவரது மகன்கள் பூபதி, பிரபு, பொம்மி நாயக்கர் ஆகியோர் இங்கு வீடு கட்ட கூடாது என மிரட்டி சென்றனர்.
இந்நிலையில் பொன்ராஜ் முத்தாலம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நான்கு பேரும் வழிமறித்து தள்ளி விட்டு இரும்பு கம்பியால் தாக்கினர்.
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.