UPDATED : அக் 27, 2026 07:59 PM
ADDED : அக் 27, 2026 07:57 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் வெற்றிப்பயணத் திட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்களை, அவர்தம் குடும்பத்தினரை நெருக்கடியில் இருந்து பாதுகாக்க புதிய திட்டம் தீட்ட அரசு முன்வர வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமார், மாநில துணைத்தலைவர் பாணடியன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட தலைவர் பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர். பொருளாளர் பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.
