/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த அவகடா; மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த அவகடா; மகிழ்ச்சியில் விவசாயிகள்
வரத்து குறைவால் விலை உயர்ந்த அவகடா; மகிழ்ச்சியில் விவசாயிகள்
வரத்து குறைவால் விலை உயர்ந்த அவகடா; மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : டிச 24, 2024 05:14 AM

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப் பகுதியில் விளைச்சல் காணும் அவகடா (வெண்ணெய் பழம்)வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
தாண்டிக்குடி கீழ் மலைப் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி விவசாயம் செய்யப்படுகிறது. இதற்கு மத்தியில் ஊடுபயிராக அவகடா சாகுபடி செய்யப்படுகிறது.
துவக்கத்தில் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு ஈடுபாடு இல்லாத இவ்விவசாயம் நாளடைவில் மருத்துவ குணம் நிறைந்த பழம் என்பதால் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்க தொடங்கியது.
வழக்கமாக அக்டோபரில் சீசன் துவங்கி ஜனவரியில் நிறைவடையும்.
நுண்ணூட்ட சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இப்பழத்தை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் குணமடையும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மேலும் ஐஸ்கிரீம்,பேசியல் கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு இதன் மூலம் செய்யப்படுகிறது.
கேரளா, சென்னை, டெல்லி உள்ளிட்ட மார்க்கெட்களுக்கு அனுப்பப்படுகிறது.
சீசன் துவங்கிய போது கிலோ ரூ. 150 முதல் 200 வரை விலை கிடைத்த நிலையில் தற்போது வரத்து குறைவால் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெங்களூர், டெல்லி, கேரளா, கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தாண்டிக்குடியிலிருந்து அவகடா அனுப்பப்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அவகடா விவசாய பரப்பும் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.