/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளபட்டி தொடக்கப்பள்ளிக்கு விருது
/
பள்ளபட்டி தொடக்கப்பள்ளிக்கு விருது
ADDED : நவ 16, 2024 05:07 AM

நிலக்கோட்டை : தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின் 2023- 24ம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதை நிலக்கோட்டை பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்க தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 2023--24-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தேர்வு குழு பரிந்துரைபடி மாவட்டத்துக்கு தலா 3 என 38 மாவட்டங்களுக்கு 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பழநி நகராட்சி தொடக்கப்பள்ளி,ரொட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது பெற்றது. இதன் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
பள்ளபட்டி பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி கூறுகையில், ''பள்ளி மேலாண்மை குழுவின் உதவியோடு மாணவர்கள் சேர்க்கையை குறைய விடாமல் பார்த்துக் கொண்டோம். அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்படி செய்தோம். மாணவர்கள் இடைநிற்றல் இல்லாது தக்க வைத்துக் கொண்டோம். இவற்றை கருத்தில் கொண்டு எங்கள் பள்ளி தேர்வாகி விருதை பெற்றுள்ளளோம்,''என்றார்.