ADDED : செப் 23, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை,அறிவியல் கல்லுாரியில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.
செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராஜகுரு பேசினார். பேராசிரியை சத்யஜோதி ஒருங்கிணைப்பு பணிகளை செய்தார்.