ADDED : நவ 21, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில் உலக மீன்வள நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம், மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை, மீன் வளர்ப்பு முறைகள், மண், நீர் பரிசோதனையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்தல், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
