UPDATED : அக் 14, 2026 03:51 AM
ADDED : அக் 14, 2026 12:44 AM
அ நிறம் | அளவு
பழநி: காந்தி கிராமத்தின் இந்திய நிர்மாண சங்கம் சார்பில் 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பழநி வட்ட சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் காந்திய கொள்கை, ஒற்றுமை, ஒழுக்கம், அஹிம்சை, சத்தியம் ஆகியன குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
பழநி பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகே துவங்கிய ஊர்வலம் பாளையம் ரோடு வழியாக பூங்கா ரோடு நாடார் மடத்தில் முடிந்தது. இயக்குனர் டேவிட் துவங்கி வைத்தார். சுய உதவிக்குழு பெண்கள் பலர் பங்கேற்றனர்.
