/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : டிச 12, 2025 06:32 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
கேதையுறம்பு ஸ்ரீ அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் பூக்குழி இறங்குதல், 32ம் ஆண்டு விழா, அன்னதான விழா நடந்தது. 1008 வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி வளர்க்கப்பட்டு பூக்குழி இறங்கிய திருவிழாவில் முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, பழையபட்டி, நவமரத்துப்பட்டி, சட்டையப்பனுார், வேடசந்துார் சுற்றிய கிராமங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
காலை முதல் இரவு வரை பொதுமக்கள்,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகில பாரத சேவா சங்கக் குழுவினர் செய் திருந்தனர்.

