ADDED : மே 28, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : என்.எஸ்.வி.வி. பள்ளிகள் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது.
20 நாட்கள் நடந்த முகாமில் வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடைப்பந்து வீரர்கள் காசிராஜன், ஜீவானந்தம் பயிற்சி அளித்தனர். சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு மேலாண்மை குழு தலைவர் முரளி தலைமை வகித்தார்.
உறவின்முறை சங்க செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.