ADDED : ஏப் 23, 2025 05:33 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், கொடியேற்று, நலத்திட்டங்கள் வழங்கல் விழா அ.வெள்ளோடு கல்லுப்பட்டியில் நடந்தது.
ஒன்றிய செயலர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில பேரவை இணைசெயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
சாணார்பட்டி ஒன்றிய செயலர் ராமராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ,ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முருகராஜ்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முத்தையா,ஒன்றிய பொருளாளர் மகாராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி, பேரவை செயலாளர் நாகராஜ், இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் உதயகுமார் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அழகு மணிகண்டன்,ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராஜ் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை நல பிரிவு செயலாளர் அருள் மரிய பிரசாத் நன்றி கூறினார்.