/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உயர்கோபுர மின் விளக்கு அடித்தள சுவரில் கருப்பு, சிவப்பு நிற டைல்ஸ் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதாக பா.ஜ., விமர்சனம்

ADDED : ஜூன் 28, 2025 12:38 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உயர்கோபுர மின்விளக்கிற்கான அடித்தள சுவற்றிற்கு கருப்பு, சிவப்பு டைல்ஸ் ஒட்டி தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக பா.ஜ., வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி பகுதியில் திருச்சி ரோடு பிரிவிலிருந்து சீலப்பாடிக்கு செல்லும் முனைப்பகுதியில் தனியார் பங்களிப்புடன் கூடிய சி.எஸ்.ஆர்., நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
மெர்கண்டைல் வங்கி ரூ.லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கிற்காக பங்களித்துள்ளது. இதில் விளக்கின் அடித்தளத்தில் கல்வெட்டு அமையும் வகையில் சுற்றுச்சுவர் எழுப்பபட்டுள்ளது.
இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. அடித்தள சுவற்றிற்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் தி.மு.க., வின் கொடியில் உள்ளதுபோல் டைல்ஸ் ஒட்டும் பணிகள் நேற்று நடந்தன.
இதை கவனித்த பா.ஜ., மண்டல பொது செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட பா,ஜ., நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததார்களிடம் கேட்டுள்ளனர்.
அமைச்சரின் அறிவுரையின் பேரில்தான் டைல்ஸ் ஒட்டப்படுகிறது என கூறி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் தனபாலன் கூறியதாவது : மக்கள் வரிப்பணமோ, சி.எஸ்.ஆர்., நிதியோ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை கூட பதிவிடலாம்.
அதை விடுத்து ஹைமாஸ் விளக்கு கம்பத்தை சுற்றி கட்டிய திட்டில் கருப்பு, சிவப்பு நிறத்தில் டைல்ஸ் பதிக்கின்றனர். இச்செயல் அரசு விதிமுறைக்கு புறம்பானது.
தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைக்கும் புறம்பானது.
அரசு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொதுவான நிறத்தில் டைல்ஸ் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.