/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.24.30 லட்சம் மோசடி
/
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.24.30 லட்சம் மோசடி
ADDED : நவ 26, 2025 01:13 AM
வடமதுரை: வடமதுரை பா.ஜ., ஒன்றிய தலைவர் வீரப்பன் 43, டிப்ளமோ படித்த தனது மகன் செல்லப்பாண்டிக்கு அரசு வேலை வாங்க நண்பரான திண்டுக்கல் மேட்டுப்பட்டி சரவணனை அணுகினார்.
அவர் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கிவிடலாம் என கூற வீரப்பன் ரூ.16 லட்சத்தை சரவணனிடமும், சின்ன காஞ்சிபுரம் பெரியகோட்டை கவுரிசங்கருக்கு ரூ.3 லட்சம், மணப்பாறை செல்லம்பட்டி பரத்திற்கு ரூ.1 லட்சம், கோயம்புத்துார் லட்சுமி நகர் உஷாவிற்கு ரூ.3 லட்சம், மதுரை பாஸ்கருக்கு ரூ.1.30 லட்சம் என ரூ.24.30 லட்சம் கொடுத்தார்.
திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் பெயரில் போலி பணி நியமன உத்தரவை சரவணன் தயார் செய்து வீரப்பனுக்கு அனுப்பினார். பணியில் சேர சென்றபோது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இது தொடர்பான புகாரில் 2024 ஆகஸ்டில் சரவணனை வட மதுரை போலீசார் கைது செய்தனர். நேற்று கவுரிசங்கர் 32, கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

