/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.,வினர் மறியல்; 300 பேர் கைது
/
மாநில தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.,வினர் மறியல்; 300 பேர் கைது
மாநில தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.,வினர் மறியல்; 300 பேர் கைது
மாநில தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.,வினர் மறியல்; 300 பேர் கைது
ADDED : மார் 18, 2025 05:33 AM

திண்டுக்கல்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 11 இடங்களில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பா.ஜ., சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்ள சென்ற மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் சந்திரசேகர், மல்லிகா, செயலர்கள் ஆனந்தி, முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் குமரன் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்ட 60 க்கு மேற்பட்ட பா.ஜ., வினரை போலீசார் கைது செய்தனர்.
பழநி: பழநி பா.ஜ., அலுவலகத்திலிருந்து மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் மறியல் செய்ய ஊர்வலமாக சென்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் செந்தில் குமார் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ., நகர தலைவர் குமார்தாஸ் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே பழனிச்சாமி, மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் கே.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் ஜி.ரவிச்சந்திரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் எல்.டி.ருத்திரமூர்த்தி உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை தெற்கு ஒன்றிய தலைவர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமையில் குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
எரியோடு: எரியோட்டில் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய பா. ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 10 பேரை எரியோடு போலீசார் கைது செய்தனர்.