UPDATED : அக் 24, 2026 04:47 PM
ADDED : அக் 24, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை சேர்ந்த விவசாயி செந்தில், தனது தோட்டத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வேலை பார்க்க வைப்பதாக மாவட்ட தொழிலாளர் நலத்துறைக்கு புகார் சென்றது.
ஆர்.டி.ஓ. பிரபாகர் தலைமையில் கண்காணிப்புக்குழு அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தினர். கோம்பை முருகவேல், அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் கொத்தடிமை தொழிலாளர்களாக வேலை பார்ப்பதை கண்டறிந்தனர்.
தம்பதியை மீட்ட அலுவலர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். செந்தில் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மீட்கப்பட்ட தம்பதிக்கு அரசின் மறுவாழ்வு நிதி வழங்கிய அலுவலர்கள், கோம்பையில் உள்ள அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
