UPDATED : அக் 24, 2026 05:05 PM
ADDED : அக் 24, 2026 05:02 PM

கள்ளிமந்தையம்: பொரளூர் கிராமத்தில் விரிவாக்கம் பணிகள் நடந்த ரோட்டில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கள்ளிமந்தையம் – தொப்பம்பட்டி ரோட்டில் உள்ள பொருளூர் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த ரோட்டில் ஒருபகுதி தாழ்வாக உள்ளதால் மழை நாட்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிலேயே தேங்கி நிற்கிறது. வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள நிலையில் நடந்தும், டூவீலர்களிலும் செல்பவர்கள் இப்பகுதியை கடக்கும்போது வழுக்கி விழுகின்றனர். வாகனங்கள் வேகமாக செல்லும்போது ரோட்டில் உள்ள மழைநீர் கடைகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
