/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தகத்திருவிழா: 1.02 லட்சம் பேர் பார்வை ரூ.2.91 கோடி புத்தகங்கள் விற்பனை

ADDED : செப் 09, 2025 04:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த புத்தகத் திருவிழாவில் 1.02 லட்சம் பார்வையிட்டதோடு, ரூ.2.91 கோடி மதிப்பில் புத்தக விற்பனையும் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் 12வது புத்தகத் திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக.28ல் தொடங்கி செப்.7 வரை 11 நாட்கள் நடந்தது. 106 புத்தக அரங்குகள், 10 அரசு சார்ந்த அரங்குகள் என 126 அரங்குகள் அமைக்கப் பட்டன.
475 பள்ளிகளை சார்ந்த 49,364 மாணவர்கள், 60 கல்லுாரிகளை சேர்ந்த 7218 மாணவர்கள் என 56,582 மாணவர்கள் என 1லட்சத்து 2 ஆயிரத்து, 723 பேர் வருகை புரிந்துள்ளனர்.
அன்பு புத்தகப்பெட்டியில் 66 பேர் 1157 புத்தகங்களை வழங்கினர். ரூ.2.91 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளது.
306 ஊராட்சிகளில் உள்ள நுாலகங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் ரூ.91,80,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள் ளன.
அதிகளவில் உண்டியல் சேமித்து புத்தகங்கள் வாங்கிய 38 பள்ளி, 14 ஊராட்சி ஒன்றிய பள்ளி, 11 நல்லாசிரியர்கள், வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என 66 பேருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.