sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புத்தக திருவிழா ஆக.28ல் துவக்கம்

/

புத்தக திருவிழா ஆக.28ல் துவக்கம்

புத்தக திருவிழா ஆக.28ல் துவக்கம்

புத்தக திருவிழா ஆக.28ல் துவக்கம்


ADDED : ஆக 01, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''திண்டுக்கல்லில் 12வது புத்தகத திருவிழா ஆக. 28 ல் துவங்குவதாக'' கலெக்டர் சரணவன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம்,திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்ட 12வது புத்தக திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக. 28ல் தொடங்கி செப். 7 வரை நடக்கிறது.

நெருக்கடி இன்றி, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரம் ஜூன் முதலே நடந்து வருகிறது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகச்சிறுக பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 32,000 உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேமிப்பு பணத்திலிருந்து புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.புத்தக திருவிழா தொடர்பான லோகோ இன்று(ஆக.1) வெளியிடப்பட உள்ளது. சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

புத்தகக் கண்காட்சியை காண வரும் பார்வையாளர்கள் பயன்படுத்த ஏதுவாக அடிப்படை வசதிகள், பாதுகாப்பிற்கு தீயணைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழாவில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என வட்டார அளவில் தேர்ந்தெடுத்து நாள்தோறும் 4 பள்ளிகள் வீதம் கலை நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்ட தினந்தோறும் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us