/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூத் வாரியாக தி.மு.க., '‛ஒன் டூ ஒன்'
/
பூத் வாரியாக தி.மு.க., '‛ஒன் டூ ஒன்'
ADDED : டிச 15, 2025 05:56 AM
வடமதுரை: சட்டசபை தேர்தலுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பிருந்தே பணிகளை துவங்கி செய்து வரும் தி.மு.க., தற்போது ஒவ்வொரு பூத் வாரியாக நிர்வாகிகளுடன் 'ஒன் டூ ஒன்' பாணியில் சந்திப்பு கூட்டம் நடத்தியது.
வடமதுரை, மேற்கு ஒன்றியத்தில் கடந்த 4 நாட்களாக இப்பணி நடந்தது. பூத் வாரியாக கட்சி கமிட்டி நிர்வாகிகளிடம் கடந்த 2019, 21, 24 தேர்தல்களில் பூத்களில் தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள், மற்ற கட்சிகள் தனித்தனியே பெற்ற ஓட்டுக்களை தெரிவித்து கூடுதல் ஓட்டுகள் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வேல்வார்கோட்டை ஊராட்சி முத்தனங்கோட்டையில் ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமையில் கூட்டம் நடந்தது. கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்க செய்ய வேண்டிய வழிமுறைகள், பிரசார பாணி குறித்து காந்திராஜன் எம்.எல்.ஏ., விளக்கினார். நிர்வாகிகள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணி, சுப்புராமன் பங்கேற்றனர்.

