/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லஞ்சம்: ஓய்வு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
/
லஞ்சம்: ஓய்வு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ADDED : மார் 29, 2025 06:44 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல்லை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு சேமிப்பு கிடங்கு மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவையைச் சேர்ந்தவர் தேவராஜ் 73. இவர் 2009ல் பழநி பகுதி அரசு சேமிப்பு கிடங்கில் மேலாளராக பணிபுரிந்தார். அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த தனியார் லாரி நிறுவன உரிமையாளர் ராகுல் 1808 நெல் மூடைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு சில நாட்களுக்கு பிறகு அதை எடுக்க வந்தார்.
அப்போது மேலாளராக இருந்த தேவராஜ் மூடைகளை எடுக்க அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராகுல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்சம் பெற்ற தேவராஜை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
தேவராஜூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நடுவர் கனகராஜ் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அனுராதா ஆஜரானார்.