/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பண்ணைக்காட்டில் கிடப்பில் பாலம் பணி
/
பண்ணைக்காட்டில் கிடப்பில் பாலம் பணி
ADDED : ஜன 13, 2025 04:06 AM

பண்ணைக்காடு : பண்ணைக்காடு நுாலகம் அருகே பாலம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளதால் வாகன ஒட்டிகள்,வாசகர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கொடைக்கானல் பண்ணைக்காடு ரோட்டில் அரசு நுாலகம் பேரூராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, வங்கி,அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்டவை செயல்படுகிறது. நுாலகம்,அரசு ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியில் ஓராண்டாக குழாய் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
குழாய் பதிக்கப்பட்டு பல மாதமாகியும் ரோடு அமைக்கப்படாமல் வெறுமனே விடப்பட்டது. பாலம் அமைக்கும் பணியும் நுாலகம், ஆஸ்பத்திரி அருகருகே உள்ளதால் நுாலகத்திற்கு செல்லும் பாதை இடிபாடுகளால் சேதமடைந்து வாசகர்கள் செல்ல முடியாமல் விபத்து அபாயத்தில் செல்கின்றனர்.
அதே நிலையில் ஆம்பூலன்ஸ், அவசர கால வாகனங்கள் கடக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. கிடப்பில் உள்ள பாலம் பணியை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.