/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் வாலிபர் கொடூர கொலை
/
திண்டுக்கல்லில் வாலிபர் கொடூர கொலை
ADDED : செப் 29, 2024 06:52 AM
திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் மர்ம நபர்களால் தலை சிதைத்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் நண்பர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் -- மதுரை ரோடு பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சம்சுதீன் மகன் முகமது இர்பான் 24.
இவருடைய நண்பர் முகமது அப்துல்லா 25. இருவரும் நேற்றிரவு டூவீலரில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர்.
பென்சனர் காம்பவுண்டு சாலையில் சென்ற போது பின்தொடர்ந்து 2 டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தினர்.
பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டினர்.
தடுக்க முயன்ற முகமது அப்துல்லாவுக்கும் தலையில் வெட்டு விழுந்தது.முகமது இர்பானின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை செய்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த முகமது அப்துல்லா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எஸ்.பி., பிரதீப் சம்பவ இடத்தில் விசாரித்தார். பழிக்குப்பழியாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.