/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகா சிவராத்திரி வழிபாட்டுக்காக மாட்டு வண்டி பயணம்
/
மகா சிவராத்திரி வழிபாட்டுக்காக மாட்டு வண்டி பயணம்
ADDED : மார் 09, 2024 01:17 AM

நிலக்கோட்டை:திடியன்மலை மகா சிவராத்திரி வழிபாட்டிற்காக நிலக்கோட்டை பகுதி மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திடியன்மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோயிலுக்கு இரட்டை மாட்டு வண்டியில் பாரம்பரிய முறைப்படி சென்றனர்.
நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மகா சிவராத்திரியில் திடியன்மலை வாலகுருநாதன் கோயிலுக்கு இரட்டை மாட்டு வண்டியில் செல்வது வழக்கம். இந்தாண்டு விழாவிற்காக நேற்று இப்பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் இணைந்து நிலக்கோட்டையில் இருந்து இரட்டை மாட்டு வண்டியில் புறப்பட்டனர். வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க சுவாமி பெட்டி அழைப்பு நடந்தது. நிலக்கோட்டை மெயின் ரோடு, அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வர கருப்பணசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் ஊர்வலமாக வாலகுருநாதன் கோயிலுக்கு புறப்பட்டனர்.
இக்குழுவினர் கூறுகையில், '7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டி மூலமாக குடும்ப சகிதமாக மாசி பச்சை திருவிழாவிற்கு புறப்படுவோம். நாகரீக காலத்திலும் மாட்டு வண்டியில் அனைவரும் ஒருங்கிணைந்து செல்வது ஒற்றுமை உணர்வை வளர்ப்பதாக உணர்கிறோம்' என்றனர்.