/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு
/
வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு
ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
வடமதுரை: இரவு நேர கடைசி டிரிப் அரசு டவுன் பஸ் பி.கொசவபட்டி வழியே வந்து செல்லாமல் நேர் வழியில் சென்றுவிடுவதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
வடமதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திண்டுக்கல் - எரியோடு மாநில நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் உள்ளது பி.கொசவபட்டி. இங்கிருந்து திண்டுக்கல்லிற்கு திருக்கண், குளத்துார் வழியே டிரிப் பஸ் சேவை உள்ளது. வடமதுரை வேடசந்துார் செல்லும் ஒரு டிரிப் மட்டும் காலை நேரத்தில் இவ்வழியே செல்கிறது.
பாடியூர், முள்ளிப்பாடி வழியே பகலில் 3 டிரிப்கள் முழுமையாக கிராமங்கள் வழியே வந்து அதே பாதையில் திரும்புகிறது. இந்த பஸ்சின் கடைசி இரவு டிரிப் மட்டும் திண்டுக்கல்லில் வரும்போது பி.கொசவபட்டி வழியே வந்து வடமதுரை செல்கிறது. திரும்பும்போது நேர்வழியில் தாமரைப்பாடி வழியே சென்றுவிடுகிறது.
இதனால் மாலை 5:00 மணிக்கு பின்னர் வடமதுரையில் இருந்து கிராமத்திற்கு பஸ் சேவையின்றி தவிக்கின்றனர். கடைசி டிரிப் திரும்பும் போதும் முறையான பாதையில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.