/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பி.வி.பி. பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
பி.வி.பி. பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 31, 2024 02:58 AM

பழநி: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி கல்வித்துறை நடத்திய தடகள போட்டிகள் செப்.28,29ல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
திண்டுக்கல் பகுதியில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
பி.வி.பி. மெட்ரிக்பள்ளி மாணவர்கள் அதிக போட்டியில் வெற்றிபெற்றனர். 14 வயது பிரிவில் 200 மீ, ஓட்டத்தில் மாணவன் சஞ்சிவ் முதல் இடம் பெற்றார். வட்டு எரிதலில் யஷ்வந்த்,முதலிடமும்,ஜெயசூர்யா 3ம் இடமும் பெற்றனர். 17 வயது பிரிவில் மாணவி சோபிகா உயரம் தாண்டுதலில் 2ம் இடம் பெற்றார். ஹரிஸ் கோலுான்றி தாண்டுதலில் முதலிடம் பெற்றார்.
19 வயது பிரிவில் சந்திரஹாசன் கோலுான்றி தாண்டுதல் முதலிடம் பெற்றார். 19 வயது பிரிவில் அபிநயா, 1500 மீ ஓட்டத்தில் 3ம் இடம் பெற்றார்.
19 வயது பிரிவில் கோலுான்றி தாண்டுதல் மாணவி அப்ரின் 2ம் இடம் பெற்றார். மாநில அளவிளான போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கு பெற உள்ளனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.