ADDED : அக் 24, 2025 02:40 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் அறிக்கை:
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடப்பாண்டில் ராபி பருவ நெல் 3ம் பருவத்துக்கு 2026 ஜன.31, சோளத்துக்கு டிச.16, மக்காச்சோளம் 3ம் பருவத்துக்கு நவ.30, நிலக்கடலை டிச.16, மக்காச்சோளம், பருத்திக்கு 2025 நவ.30, உளுந்துக்கு நவ.15ம் தேதியும் பயிர் காப்பீட்டுக்கான பதிவு இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் சோளத்துக்கு ரூ.187, மக்காச்சோளத்திற்கு ரூ.453, நெல்லிற்கு ரூ.578, பருத்திக்கு ரூ.285, உளுந்துக்கு ரூ.255, நிலக் கடலைக்கு ரூ.438 வீதம் விவசாயிகள் தவணைத் தொகையாக செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.38,500, சோளத்துக்கு ரூ.12,496, மக்காச் சோளத்துக்கு ரூ.30,200, பருத்திக்கு ரூ.18,996, நிலக்கடலைக்கு ரூ.29,200 வீதம் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

