/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரிசு நிலத்தை மேம்படுத்த அழைப்பு
/
தரிசு நிலத்தை மேம்படுத்த அழைப்பு
ADDED : ஜூலை 27, 2025 04:25 AM
திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் செய்திகுறிப்பு: வேளாண் வளர்ச்சியில் கிராமங்கள் தன்னிறைவு பெற்றிட தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக சேர்ந்து குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி நீர் ஆதாரங்கள், நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமன் செய்ய 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.9600 மானியம் வழங்கப்படுகிறது.
வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.செயல்விளக்கத் திடல் அமைத்திட ரூ.450 மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.