/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ள துப்பாக்கியை கண்டறிய பிரசாரம்
/
கள்ள துப்பாக்கியை கண்டறிய பிரசாரம்
ADDED : செப் 24, 2025 05:56 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் வனம், வனவிலங்குகளை காக்கவும், குற்றவாளிகள் மனம் திருந்த வனத்துறை செப்.19 முதல் அக்.19 வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்போர் தாங்களே முன்வந்தோ, சமூக ஆர்வலர்கள் மூலம் வனத்துறை அலுவலர்களிடம் அக்.19 க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது.
காப்பு காட்டிற்குள் குப்பை போடுதல், புகைப்பிடித்தல், ரோட்டோர வனப்பகுதியில் பாட்டில் உடைப்பது, பட்டா நில வேலிகளில் மின் இணைப்பு, சுருக்கு கம்பி அமைத்தல், வாய் வெடி, விஷமிடுதல் உள்ளிட்டவை தண்டனைக்குறியது என கொடைக்கானல் வனத்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.