/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி
/
மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி
ADDED : ஜூன் 16, 2025 02:07 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி, அறிவு ஜீவிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல் குள்ளனம்பட்டி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்விற்கு மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பேசினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், மேற்குமாவட்ட தலைவர் ஜெயராமன், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் சந்திரசேகர், முத்துக்குமார், ஆனந்தி, பொருளாளர் கருப்புசாமி, துணைத்தலைவர்கள் சொக்கர், மல்லிகா, வீரஜோதி, செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகை சாமி, தமிழ்வாணன், சபாபதி, பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் செயல்திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி பகிர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்கள் பயன்கள், வங்கிக்கடன் சலுகைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. 2026 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு செய்ய வேண்டிய பணிகள், உறுப்பினர் சேர்க்கை, பிரசாரம், சக்தி கேந்திர அமைப்புகளை பலப்படுத்துதல், நிர்வாகிகள் கூட்டம் நடத்துதல் குறித்தும் பேசினர்.