/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: பெரியசாமி சாடல்
/
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: பெரியசாமி சாடல்
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: பெரியசாமி சாடல்
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: பெரியசாமி சாடல்
ADDED : பிப் 04, 2025 05:32 AM
திண்டுக்கல்: ''தமிழக அரசுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது,'' என, திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி கூறினார்.
அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சி துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முதல் மாநிலமாக இருக்கும் தமிழகத்திற்கு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது.
மெட்ரோ என பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்டும் எதற்கும் ஒதுக்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 9 லட்சம் பேருக்கு தினமும் வேலை கொடுக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை என்றார்.