/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் முடங்கிய சோதனைச் சாவடி
/
'கொடை' யில் முடங்கிய சோதனைச் சாவடி
ADDED : நவ 06, 2025 06:53 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலை பிரிவில் போலீஸ் சோதனைச்சாவடியை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு, பழநி ரோடுகள் பிரதானமாக உள்ளது.இவ்விரண்டு ரோடுகளும் சந்திக்கும் பகுதியாக பெருமாள் மலை பிரிவு உள்ளது.இங்கு கொடைக்கானல் போலீஸ் சார்பாக சோதனைச் சாவடி 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன. தற்போது சோதனைச்சாவடி மையம் வெறும் காட்சி பொருளாக வீணான பொருட்களை குவிக்கும் குவியல் மையமாக உள்ளது.
ஏராளமான வாகனங்கள் சந்திக்கும் இப்பகுதியில் வருகின்ற வாகனங்களை சோதனை செய்வது இப்பகுதிகளில் நிகழும் குற்ற நிகழ்வுகளை கண்காணிப்பதற்கு சோதனைச்சாவடி அவசியம் என்ற நிலை உள்ளது.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சோதனைச்சாவடி செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

