UPDATED : நவ 15, 2026 05:02 PM
ADDED : நவ 15, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் காக்காயன்பட்டியில் இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் சார்பில், குழந்தைகள் தின விழா நடந்தது.
ஆலோசகர் சின்னையா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வீரமணி வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட செஸ் சங்கத்தின் செயலாளர் அப்துல் நாசர், இசை நிறுவன ஆலோசகர் ஸ்ரீகாந்த், வட்டார இயற்கை விவசாயிகள் குழு தலைவர் சின்னையா, காக்காயன்பட்டி மேலாண்மை வள மையத் தலைவர் ராமன், செயலாளர் மச்சக்காளை பங்கேற்றனர். குழந்தைகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
