ADDED : மே 05, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை :தென்னம்பட்டி, பிலாத்து கிராமங்களை சார்ந்த ஆண்டிபட்டியில் சக்திவிநாயகர், முனியாண்டி, காளியம்மன், மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.29ல் துவங்கியது.
தீர்த்தக்குடம் எடுத்தல், கிராம தேவதை அழைப்பு, அம்மன்கள் கரகம் பாலித்தல், மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன்கள் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறைவடைந்தது.