UPDATED : ஜூலை 13, 2026 03:53 PM
ADDED : ஜூலை 13, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார் பேரூராட்சி பகுதியில் கிரீன் அண்டு கிளீன் தன்னார்வ அமைப்பு சார்பில் துாய்மைப் பணிகள் துவங்கியது.
அமைப்பு நிறுவனரும் எம்.எல்.ஏ.,வுமான வீரா.சாமிநாதன் தலைமை வகித்தார். நேருஜி நகர் பகுதியில் தெருக்களை துாய்மைப்படுத்துதல், 15 வார்டுகளிலும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் புற்கள், முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
