ADDED : ஜன 16, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: -பழநி கோம்பைபட்டி வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்களில் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்
றன. சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. இப்பகுதியில் அடிக்கடி யானை வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.