ADDED : அக் 26, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஒரு ஆண்டாகவே தேங்காய் விலை உயர்வை சந்திக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் ரூ.70க்கு விற்ற தேங்காய் விலை தற்போது ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது. பொள்ளாச்சி தேங்காய் ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை ஆகிறது. திண்டுக்கல்லில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது மழைக்காலம் என்பதால் விளைச்சல் குறைவாகவே இருக்கும்.தேங்காய் விலை மேலும் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தை, மாசி மாதத்திற்கு பின்பே தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும் என்பதால் அப்போதுதான் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

