/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடி மலைப்பகுதியில் காபி சீசன் துவங்கியது
/
தாண்டிக்குடி மலைப்பகுதியில் காபி சீசன் துவங்கியது
ADDED : நவ 12, 2024 11:47 PM

தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப் பகுதியில் காபி சீசன் துவங்கி உள்ளது.
இம்மலை பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் அராபிகா காபி சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பரில் துவங்கும் சீசன் ஜனவரியில் நிறைவடையும். நடப்பாண்டில் பூ பூக்கும் தருணத்தில் தொடர் மழை,சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சல் பாதித்துள்ளது. தொடர் மழையால் காபி பழங்கள் பழுக்க தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காபி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் பிரேசில், வியட்நாம் நாடுகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அங்கு உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காபிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
தற்போது தாண்டிக்குடி கீழ் பழநி மலை, சிறுமலை பகுதிகளில் காபி பழங்கள் பழுக்க துவங்கி உள்ளன. விவசாயிகள் முதற்கட்டமாக பறிக்கும் பணியில் ஈடுபட்டு இவற்றின் தளிர்களை இயந்திரம் மூலம் பிரித்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அராபிகா காபி கிலோ ரூ.350 முதல் ரூ. 400 வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காபி விலை அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் இவ்விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

