/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காபி தொழில்நுட்ப ஊடுபயிர் கருத்தரங்கு
/
காபி தொழில்நுட்ப ஊடுபயிர் கருத்தரங்கு
ADDED : ஆக 07, 2025 07:08 AM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு , இந்திய காபி வாரியம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து காபி தொழில்நுட்ப ஊடுபயிர்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடத்தியது. காபி ஆராய்ச்சி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அகில இந்திய வேளாண் மாணவர் சங்க தலைவர் சகாதேவ் சிங் கலந்து கொண்டார்.
காபி வாரிய விரிவாக்கம் இணை இயக்குனர் கருத்தமணி, இணை இயக்குனர் காபி திட்டம் சிவக்குமார் சாமி, அகில இந்திய வேளாண் மாணவர் சங்க செயலாளர் வினோத், காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார்,காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் தங்கராஜ், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பாலகும்பகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஸ்வர்ணலதா பேசினர். காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பழங்குடியின விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கப்பட்டன.