/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
/
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2025 08:09 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில், ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பயோ டீசல் தயாரிக்க வழங்க வேண்டும் என கலெக்டர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திண்டுக்கல்லில், அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம், பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம் உணவுப் பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிய வேண்டும்.தயாரிப்பாளர்கள், மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் தயாரிக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது, உணவுகளில் செயற்கை நிறங்கள் சேர்க்கக் கூடாது. சமைத்த உணவுகளை வாழைஇலை, மந்தார இலையில் பரிமாற வேண்டும். அனுமதிக்கப்பட்ட சில்வர் பாயில், டப்பாக்களில் உணவு பொருட்களை பார்சல் செய்ய வேண்டும், வடை, பஜ்ஜி, போண்டா பலகாரங்களை செய்தித்தாள்களில் பொட்டலமிடக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டு நிறுவனத்துக்கு பயோடீசல் தயாரிக்க வழங்கவேண்டும்.மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாள்கள் கடைமூடப்படும், 2ம் முறையாக தவறிழைப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், 30 நாட்கள் கடை மூடப்படும், 3ம் முறை தவறுசெய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 மாதம் கடை மூடப்படும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.